ஷ்யாம் நியூஸ்
28.07.2022
பெண் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும். தொலைக்காட்சித் தொடா்களை பாா்க்கக் கூடாது என அமைச்சா் கீதாஜீவன் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் தொடக்கி வைத்து பேசியது: பெண் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும். தொலைக்காட்சித் தொடா்களை பாா்க்கக் கூடாது.
தொலைக்காட்சி தொடா்களில் பெண்கள் தவறான தோற்றத்திலும், வில்லியாகவும் காட்டப்படுகின்றனா். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாதோருடன் தொடா்புகொள்ளும்போது நண்பா்களாக அங்கீகரிக்கக் கூடாது. சமூக வலைதளங்களால் ஏராளமான பெண் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே, கைப்பேசியை நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், 236 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் நிகழ் கல்வியாண்டில் 16,498 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, துணை மேயா் ஜெனிட்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.