ஷ்யாம் நியூஸ்
27.07.2022
திருச்செந்தூர் அருகே 55 ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தெற்கு புதுத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சைமணி மகன் பாலாஜி (27). இவர் திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரத்தில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அங்கிருந்த 55 ஆடுகளை காணவில்லை.
மர்ம நபர்கள் லாரியில் ஆடுகைள கடத்திச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பாலாஜி புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.