SHYAM NEWS
19/07/2022
சென்னையில் நடந்த மாநில கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
டி.ஏ.வி. பள்ளிகள் சார்பில் கிரிதா கேந்திரம் சுவாமி தயானசந்த் சரஸ்வதி மாநில அளவிலான பள்ளிகள் கூடைப்பந்து போட்டி சென்னையில் நடந்தது. மாணவிகள் பிரிவில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிசாம்பியன் பட்டம் பெற்றது. கோவை சி.சி.எம்.ஏ. அரசு பள்ளி 2-வது இடத்தை பிடித்தது. மாணவர்கள் பிரிவில் சென்னை ஏ.வி.எம். ராஜேஸ்வரி பள்ளி முதல் இடத்தை பிடித்தது. வேலம்மாள் பள்ளி 2-வது இடத்தை பிடித்தது