ஷ்யாம் நியூஸ்
29.07.2022
நீராவி புதுப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம் நீராவி புதுப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-23 முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார் அம்மாள் தலைமை வகித்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் நோக்கம் செயல்பாடு அதன் முக்கியத்துவத்தை பற்றியும் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு கிடைக்க பெரும் நமைகள் குறித்தும்எடுத்து கூறினார். நீராவி புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அண்ணமகாராஜா முன்னிலை வகித்தார்.
துணை வேளாண்மை அலுவலர் முத்துசாமி தரிசு நில மேம்பாடு அதன் அவசியம் பற்றி விளக்கமளித்தார். முன்னதாக வேளாண்மை உதவி இயக்குநர் கீதா வரவேற்புரை வழங்கினார். நிறைவாக உதவி வேளாண்மை அலுவலர் சுதாகர் நன்றியுரை வழங்கினார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்ப துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சுதாகர், வட்டார தொழில்நுட்ப மேலாளர் தேவசாந்தி, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் குமரேசன், மங்கையர்க்கரசி ஆகியோர் செய்திருந்தனர்.