ஷ்யாம் நியூஸ்
29.07.2022
தூத்துக்குடி இரயில் நிலையத்தில் அடிப்படை வசதி என்பது கேள்விக்குறியாக உள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் தூத்துக்குடி இரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டும் இரயில் நிலையமாக உள்ளது. ஆனால், இந்த இரயில் நிலையத்திற்கு வரும் மக்களின் அடிப்படை வசதி என்பது கேள்விக் குறியாக உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் மூலம் இரயில் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி இரயில் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் குப்பைகளாக உள்ளது.
மேலும், இரயில் நிலையத்திற்கு வரும் வாகனங்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே செல்வதற்கும் தனி, தனி வாசல்கள் உள்ளது. வெளியே செல்லும் வாசலில் மாநகராட்சி சார்பில் போடப்பட்ட கால்வாய் உயரமாக இருப்பதால் சிறியவகை கார்கள், ஆட்டோக்கள் வெளியேறுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தில் நாய்கள் தொல்லை காணப்படுகிறது. இதுபோன்ற குறைகளை சரிசெய்து இரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.