ஷ்யாம் நியூஸ்
29.07.2022
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் ஜங்ஷன் பகுதியில் கடந்த 06.07.2022 அன்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்களான கணேசன் மகன் பிரபு வினோத்குமார் (25), முகதூம் முகமது மகன் மேத்தாபிள்ளை மரைக்காயர் (25) மற்றும் மைதீன் அப்துல் காதர் மகன் ஜமால் (25) ஆகிய 3 பேரையும் தென்பாகம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் கைதான பிரபு வினோத்குமார், மேத்தா பிள்ளை மரைக்காயர் ஆகிய இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 36 பேர் உட்பட 155 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.