SHYAM NEWS
15/07/2022
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளி நாட்களில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவங்கியுள்ளது.
தமிழகத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்கப்படும் என முதல் அமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி அரசு பள்ளிகளில் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு இன்று தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் 6, 7, 8 வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது. பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.பி.சி.வீ. கணபதி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை ஒட்டி 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு இன்று காலை இனிப்புடன் சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்