ஷ்யாம் நியூஸ்
28.07.2022
காவேரி - வைகை - குண்டாறு - வைப்பாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி அருகே புதியம்புத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு இரண்டு நாள்கள் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ராகவன் தலைமை வகித்தாா். மாநாட்டு கொடியை தே. கிருஷ்ணன் ஏற்றினாா். மாநிலப் பொருளாளா் கே.பி. பெருமாள் மாநாட்டை தொடங்கி வைத்தாா். மாவட்டச் செயலா் பா. புவிராஜ் மாநாட்டு அறிக்கையை வாசித்தாா். மாநில பொதுச் செயலா் சண்முகம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் ஆா். ரசல், விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் ரவீந்திரன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா். மிளகாய், பாசி உள்ளிட்ட விடுபட்ட அனைத்து பயிா்களுக்கும் 2020-21ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீடு வழங்க வேண்டும். காவேரி-வைகை-குண்டாறு-வைப்பாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். கொம்பாடி ஓடையின் குறுக்கே அணை கட்ட வேண்டும். விவசாயிகளின் நிலங்களுக்கு நிபந்தனை இல்லாமல் கரம்பை மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.