ஷ்யாம் நியூஸ்
22.07.2022
தூத்துக்குடியில் மீன் கம்பெனியில் ரூ.35ஆயிரம் மதிப்புள்ள கூண்டுகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி சிலுவைப்பட்டி, பெரிய செல்வம் நகரை சேர்ந்தவர் அருள்மணி மகன் ஸ்டீபன் எட்வர்ட் மணி (49), இவர் வடக்கு காமராஜர் நகரில் மீன் கம்பெனி வைத்துள்ளார். கடந்த 3 நாட்களாக மீன் கம்பெனியில் கனவாய் மீன் வைக்கும் கூண்டுகள் திருடுபோயுள்ளது. நேற்று 4வது நாளாக கூண்டை திருடிய வாலிபரை கையும் களவுமாக பிடித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தூத்துக்குடி சோட்டையன் தோப்பு தெற்கு தெருவை சேர்ந்த அம்பிராஜ் மகன் அஜித் குமார் (26) என்பதும், அவர் 4 கூண்டுகளை திருடியதும் தெரியவந்தது. இதன் மதிப்பு 35 ஆயிரம் ஆகும். இதையடுத்து போலீசார் அஜித் குமாரை கைது செய்து, அவர் திருடிய கூண்டுகளை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.