ஷ்யாம் நீயூஸ் 31.07.2022 தூத்துக்குடி மாநகராட்சியில் 29ல் தீர்மானம் 30ல் ஆய்வு மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நாள் முதல் அனைத்து பகுதிகளின் வளர்ச்சிக்கும் முழுமையாக பணியாற்றி வருகிறாhர். தினமும் பொதுமக்களை சந்தித்து தனது அலுவலகத்திள்ள உதவியாளர் மூலம் வரும் மனுக்களுக்கு குறைகளை தீர்க்கும் வகையில் அதிகாரிகளுடன் இனைந்து பணியாற்றி வரும் மேயர் கவனத்திற்கு முத்தையாபுரம் ரவுண்டா பகுதியில் உப்பாத்து ஓடைக்கு அருகில் இரண்டரை ஏக்கர் மாநகராட்சியிடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தகவல் கிடைக்க பெற்றதையடுத்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு அந்த இடம் தற்போது மீட்கப்பட்டுள்ளது. கடந்த 29ம் தேதி மாநகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த இடத்தில் பல மாவட்டங்களிலிருந்து பாதசாரிகளாக திருச்செந்தூருக்கு நடந்து வரும் பக்தர்களுக்கும் வாகனங்களில் வருபவர்களுக்கும் ஓய்வு எடுக்கும் வகையில் அந்த இடத்தில் கழிப்பிட வசதி பூங்கா ஓய்வு அறை என அனைத்து கட்டமைப்பு வசதிகளும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க செய்து கொடுக்கப்படும் என்று மேயர் கொண்டுவந்த தீர்மானத...