ஷ்யாம் நியூஸ்
04.0.2022
தூத்துக்குடியில் ரயில் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த நாகூர் ஹனிபா மகன் காதர் மைதீன் (25) எனத் தெரியவந்தது.
இவர் தனது தந்தையுடன் இணைந்து கேலக்ஸி பென்சிங் சர்வீசஸ் எனும் நிறுவனம் அமைத்து தொழில் செய்து வந்துள்ளார். தொழில் சம்பந்தமாக ஆர்டர் எடுத்து வருவதாக வீட்டிலிருந்து சென்றவர், நேற்று மாலை 4 மணி அளவில் தூத்துக்குடியில் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார். இறந்தவரின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.