ஷ்யாம் நியூஸ்
12.08.2022
தூத்துக்குடியில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 12.07.2022 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி கற்பகவல்லி (27) என்பவரை கொலை செய்த வழக்கில் அவரது கணவர் வேல்முருகன் (35) மற்றும் வேல்முருகன் நண்பரான ஸ்ரீவைகுண்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த பண்டாரம் மகன் பிரேம்குமார் (21) ஆகிய 2 பேரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கொலை வழக்கில் கைதான இவர்கள் இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தபபட்ட 10 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 36 பேர் உட்பட 163 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.