ஷ்யாம் நியூஸ்
12.08.2022
தூத்துக்குடியில் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடியின் நிறத்தில் மண்பாண்டங்கள் விற்பனை செய்து பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார்.
தற்போது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா அமுத பெருவிழாவை முன்னிட்டு, மண்பாண்டங்களளில் நமது இந்திய தேசிய கொடியின் மூன்று வண்ணங்களை பூசி விற்பனை செய்து வருகிறார். மிகுந்த கலைநயத்துடன் காணப்படும் இந்த மண்பாண்டங்கள் மக்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் தேசப்பற்றையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த சிறப்பு வேலைபாடுகளுக்காக அவர் கூடுதலாக பணம் எதுவும் வசூலிக்கவில்லை என்பது குறிப்பித்தக்கது. இதனை மக்கள் பலரும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.