ஷ்யாம் நீயூஸ்
22.08.2022
தூத்துக்குடியில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது.
தூத்துக்குடி இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தூத்துக்குடி மேலூர் பங்காள தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பின்னர் கோவில் வந்தடைந்து சிறப்பு பூஜையுடன் கோலாட்டம், நடைபெற்றது. பின்னர் கிருஷ்ணர் வேடமிட்டு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்து பின்னர் கோவில் சென்றடைந்தது. முக்கிய நிகழ்வான உறியடி நிகழ்ச்சி அப்பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பக்தர்கள் திராளானோர் கலந்து கொண்டு உறியடி நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். பின்னர் பூஜையுடன் கிருஷ்ண ஜெயந்தி பூஜை நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ண கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.