ஷ்யாம் நியூஸ்
08.08.2022
பொய் வழக்குபதிவு செய்த காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் சேரகுளத்தைச் சேர்ந்த சித்திரைப்பாண்டி என்பவர் மீது கடந்த 2016 மற்றும் 2017 ஆண்டு பொய் வழக்கு பதிவு செய்ததாக திருவைகுன்டம் திருவைகுன்டம் காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
மேலும், 2பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு,காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.