எதிர்கால இந்தியாவை வழிநடத்துபவர்கள் மாணவ மாணவிகள் தான் போதை பொருளுக்கு அடிமையாக கூடாது கால்டுவெல் பள்ளி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
ஷ்யாம் நீயூஸ்
11.08.2022
எதிர்கால இந்தியாவை வழிநடத்துபவர்கள் மாணவ மாணவிகள் தான் போதை பொருளுக்கு அடிமையாக கூடாது கால்டுவெல் பள்ளி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளிதாளாளர் ஸ்டேன்லி வேதமாணிக்கம் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. எம்.எல்.ஏ கலெக்டர், எஸ்.பி, எல்லோருக்கும் முதலமைச்சர் தனித்தனியாக சுற்றறிக்கை அனுப்பி அந்த மாவட்டத்திலும் சட்டமன்ற தொகுதிக்குட்பட பகுதிகளிலும் ஓரு வாரம் பள்ளி கல்லூரிகளில் போதை தடுப்பு உறுதி மொழி எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டு கொண்டதற்கிணங்க இந்த பள்ளியில் நடைபெறுகிறது.
75வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாட உள்ளோம் இந்த பள்ளியில் படித்த பலர் தொழிலதிபர்களாகவும் அரசுதுறை சார்ந்தவர்களாகவும் உள்ளனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து கப்பல் விட்ட வஉசியும் இந்த பள்ளியில் படித்துள்ளனர். எதிர்கால இந்தியாவை வழி நடத்தவுள்ள மாணவ மாணவிகள் பள்ளி பருவத்தில் ஒழுக்கமாகவும் நல்ல பழக்க வழக்கங்களுடன் படிக்க வேண்டும். தன்னுடய தாய்தந்தையர் கஷ்டப்பட்டு உங்கள் எதிர்காலத்தை உருவாக்கி தருகிறார்கள். ஆசிரியர்கள் உங்கள் அறிவுத்திறனை வளர்த்து படிப்பறிவு மூலம் உலகத்திற்கு அடையாளம் காட்டுகிறார்கள். ஓவ்வொரு புரிதலும் உங்களது வளர்ச்சிக்கு உதவும். எதிர்கால தலைவர்களாக வரவுள்ள நீங்கள் எந்த விதமான தேவையற்ற போதை பழக்கத்திற்கு ஆளாக கூடாது அதை பற்றி சிந்திக்கவும் கூடாது. படிப்பு ஒன்றுதான் முக்கியம் என்று கருத வேண்டும். வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் முழு முயற்சியை மேற்ககொண்டு முன்னேற வேண்டும். இந்த பருவம் தான் படிக்கின்ற காலம் அறிவுத்திறன் வளர்கின்ற வளர்ச்சியுள்ள பருவங்கள் இதை தவறவிட்டு பின்னர் வருத்தப்பட கூடாது நான் பல லட்சம் செலவழித்து படிக்க வருகிறேன் என்றால் என்னை யாரும் சேர்க்கமாட்டார்கள் பெண்கள் குறை தீர்ப்பதற்கென்று தொடர்பு எண்கள் உள்ளன. அதை தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு நான் தோல்வியை சந்தித்தது உண்டு விடா முயற்சியின் மூலம் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சராக பணியாற்றும் நான் 10 ஆண்டுகளுக்கு பின்பு இந்த பள்ளிக்கு மீண்டும் வந்துள்ளேன் என்று பேசினார். பின்னர் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விழாவில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்சன், மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்செல்வி, உதவி திட்ட அலுவலர் பெர்சியாள் ஞானமணி, மற்றும் ஜீவன் ஜேக்கப் உள்பட பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் ஜேக்கப் மனோகர் நன்றியுரையாற்றினார்.