கூட்டாம்புளியில் பெருந்தலைவர் வாழை உழவர் உற்பத்தி தொழிற்கூடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திறந்து வைத்தார்.
ஷ்யாம் நியூஸ்
04.08.2022
தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் பெருந்தலைவர் வாழை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் தொழிற்கூடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி ஊராட்சிக்குட்பட்ட கூட்டாம்புளியில் பெருந்தலைவர் வாழை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி தொழிற்கூடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் திறந்து வைத்து பேசியதாவது: குமாரகிரி பஞ்சாயத்து கூட்டாம்புளி கிராமத்திலே பெருந்தலைவர் வாழை உற்பத்தி கம்பெனிக்கு நபார்டு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலமாக நாம் ரூ.18 லட்சத்துக்கு மேற்பட்ட பொருட்செலவிலே குடோன் மட்டுமல்லாமல் அங்கு விவசாய பொருட்களின் மதிப்பு கூட்டு பொருள் மாற்றுவதற்கு மெசினரி வாங்கி கொடுத்திருக்கிறோம்.
இந்த மெசினரி மூலமாக இந்த பகுதியில் உள்ள அனேக விவசாயிகள் வாழை உற்பத்தி செய்கின்றனர். வாழை பட்டையில் இருந்து நார் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் செய்வதற்கு மெசினரி கொடுத்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் வாழை பட்டையில் இருந்து நிறைய பொருட்கள் செய்து அதையும் தூத்துக்குடியில் இருக்கிற தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு கொடுத்து அதன் மூலமும் வருமானம் வருகிறது. இந்த பகுதியில் உளுந்து, மல்லி, அரிசி இடியாப்பம் இடிக்கிற மெசினரியும் வழங்கியிருக்கிறோம். இந்த நிகழ்விற்கு நபார்டு உதவி செய்திருக்கிறார்கள்.
வாழ்ந்து காட்டுபோம் திட்டம் மூலமும் நிதி உதவி செய்திருக்கிறார்கள். வாழை பட்டையில் இருந்து வாழை நாராக தயாரிக்கிறோம். இதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுகிறோம். இதை வைத்து சேரிஸ் தயாரிக்கிறோம். சேரியில் சரிகையில் மெருகூட்டுகிறோம். கயத்தாறு, கோவில்பட்டியில் பருத்தி போடுகிறார்கள். தென் பகுதியில் ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழை அதிகம் போடுகிறார்கள். இதை வைத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கிறோம்.
குமாரகிரி ஊராட்சிக்குட்பட்ட கூட்டாம்புளி பெருந்தலைவர் வாழை உழவர் உற்பத்தியாளர் கம்பெனியில் வாழை நாரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இக்கம்பெனிக்கு சொந்தமாக ஒரு தொழிற்கூடம் இன்று இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்கூடத்தின் முக்கிய வணிகம் வாழை நார் பிரித்தெடுக்கும் அலகு, வாழைக் கூடை, உள்ளீட்டு கடை, சொட்டு நீர் பாசனம், நியூட்ரிமிக்ஸ், விவசாயம் தெளிப்பான்கள், ஊறுகாய், காய்கறிகள் கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகும். இத்தொழிற்சாலையின் வாயிலாக 45 கிராமங்களை சேர்ந்த வாழை விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். நபார்டு வலை போர்ட்டலில் FPO இன் தரம் "A" ஆகும்.
நிதி விவரங்கள் (TNRTP (COVID-19 உதவி) 2020-2021 நிதியாண்டில் ரூ.10 லட்சம் மானியமாகப் பெறப்பட்டது, மேலும் இது வாழை நார் பிரித்தெடுக்கும் அலகு, மாவு மில் மற்றும் வாழைப்பழ வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. நபார்டு (வணிக மேம்பாட்டு உதவி) ரூ. 2020-2021 நிதியாண்டில் 5 லட்சம் மானியமாகப் பெறப்பட்டு, அது பயன்படுத்தப்பட்டது. 2021-2022 நிதியாண்டில் கடனாக ரூ.5 லட்சம் மெஸ்ஸானைன் கடன் பெறப்பட்டது, அது கட்டிடக் கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. Nயுடீ முஐளுயுN 2021-2022 நிதியாண்டில் ரூ.12 லட்சம் கடனாகப் பெறப்பட்டது மற்றும் அது கட்டிடக் கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.
நபார்டு வங்கி 2021-2022 நிதியாண்டில் ரூ.4.73 லட்சம் மானியமாக அனுமதித்தது மற்றும் அது மொபைல் வேனுக்குப் பயன்படுத்தப்பட்டது. 2022-2023 நிதியாண்டில் ரூ.15 லட்சம் வுNசுவுP மானியமாகப் பெறப்பட்டது, மேலும் இது சொட்டு நீர் பாசன உதிரி பொருட்கள், வாழை நார் கூடைகள் மற்றும் கரிம உரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. வணிக நிறுவனம் வாழை நார் பிரித்தெடுக்கும் பிரிவு, சமண நீர்ப்பாசன அமைப்புகளில் டீலர்ஷிப்பைக் கொண்டுள்ளது. நிறுவனம் வாழைப்பழம் மற்றும் உள்ளீட்டு கடையைத் தொடங்கியுள்ளது.
இந்நிறுவனம் தூத்துக்குடி உழவர்சந்தையில் இரண்டு சில்லறை விற்பனை நிலையங்களையும், சொட்டு நீர் பாசன உதிரி பாகங்கள், விவசாய தெளிப்பான்கள் கூட்டாம்புளியில் உள்ளது. இந்நிறுவனத்தின் வாயிலாக nutimix, வாழைத் தண்டு ஊறுகாய் மற்றும் வாழைப்பூ ஊறுகாயை மகளிர் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. இங்கு வாழை பட்டையில் இருந்து வாழை நார் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றில் இருந்து கூடை, கைவினை பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பருத்தி நூலும், வாழை நாரும் இணைத்து சேலை தயாரிக்கும் திட்டத்தினை செயல்படுத்த உள்ளார்கள். 2021-2022 சாதனைகள் நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் இருந்து பசுமை விருதை (2022-2023) பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குநர் வீரபத்திரன், நபார்டு உதவி பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், திருநெல்வேலி ஸ்காட் குழும நிறுவன தலைவர் முனைவர் கிளிட்டஸ் பாபு, வேளாண் இணை இயக்குநர் முகைதீன், தோட்டக்கலை துணை இயக்குநர் சுந்தரராஜன், வேளாண்மை துணை இயக்குநர் முருகப்பன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் கிளாட்வின் இஸ்ரேல், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் கார்த்திகேயன், குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரைராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.