ஷ்யாம் நீயுஸ்
10.08.2022
தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதி தேர்தல் அமைச்சர் கீதாஜீவனிடம் விருப்பமனு அளித்தனர்.
தூத்துக்குடி திமுக தலைமை அறிவிப்பிற்கிணங்க 15வது கட்சி தேர்தல் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிட திமுகவின் 15வது கட்சி தேர்தலை முன்னிட்டு எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் ஆணையர் முன்னாள் எம்.எல்.ஏ ரவிசந்திரன், ஆகியோரிடம் விருப்பமனுக்களை வழங்கினார்கள்.
தூத்துக்குடி மாநகரத்தி;ல் செயலாளர் அவைத்தலைவர் பொருளாளர் மாவட்ட பிரதிநிதி தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் ஆணையர் முன்னாள் எம்.எல்.ஏ ரவிசந்திரன் ஆகியோரிடம் மாநகர செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வேட்பு மனுக்களை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அவைத்தலைவர் ஏசுதாஸ், பொருளாளர் அனந்தையா, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மேகநாதன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாநகர துணைச்செயலாளரும் கவுன்சிலருமான கீதாமுருகேசன், கனகராஜ், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், தெய்வேந்திரன், கந்தசாமி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், பாஸ்கர், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, வட்டச்செயலாளர்கள் ரவிந்திரன், சுரேஷ், பாலு, சதீஷ்குமார், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், ராஜாமணி, மற்றும் கருணா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.