ஷ்யாம் நியூஸ்
12.08.2022
நாசரேத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2லட்சம் மதிப்புள்ள நகை, பணம், பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் 2.25 பவுன் தங்க நகை, 18 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோயிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2லட்சம் ஆகும். இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராய்சன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.