ஷ்யாம் நீயூஸ்
12.08.2022
உப்பளத் தொழிலாளர்களுக்கான ரூ. 5000 நிவாரண நிதி வழங்கும் திட்டம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
மழைக் காலமான அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பு உற்பத்தி இல்லாததால் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும், என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடியாக கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூ5000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில் நெய்தல் உப்பு என்ற பெயரில் வெளிச்சந்தையில் உப்பு விற்பனை திட்டத்தை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.