ஷ்யாம் நியூஸ்
12.08.2022
குலசேகரப்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் :- ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்தபடியாக 2-வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரன்பட்டினம் அமைந்து உள்ளது. இந்த பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு மிகவும் சிறந்த இடமாக உள்ளது. இங்கு ஆய்வு மேற்கொண்டதில் முழு திருப்தியாக உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் இருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை சிறப்பாக விண்ணில் செலுத்த முடியும். தெற்கு நோக்கிய ஏவுதலுக்கு சிறந்த இடமாக உள்ளது. 100 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
அரசிடம் இருந்து சில அனுமதியும், பாதுகாப்பு அனுமதியும் பெற வேண்டி உள்ளது. நாங்கள் ஏவுதளம் அமைப்பதற்கு தயாராக உள்ளோம். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து குடியிருப்புகள் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து குடியிருப்புகள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆகையால் சிறிய வகை ராக்கெட்டுகளான எஸ்.எஸ்.எல்.வி. விண்ணில் செலுத்துவதற்கு உகந்ததாக உள்ளது. வருகிற செப்டம்பர் மாதத்தில் அடுத்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.