ஷ்யாம் நியூஸ்
12.08.2022
தூத்துக்குடியில் உகந்த உணவு குறித்து 7.5 கி.மீ தூரம் விழிப்புணர்வு நடை பயணத்தினை, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக வளாகத்தில் உகந்த உணவு குறித்து 7.5 கி.மீ தூரம் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நடை பயணத்தினை, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் லோக.பாலாஜி சரவணன், ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சார்பாக, உகந்த உணவு குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு நடைபயணத்திஜனை தொடங்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
இந்நடைபணத்தின் நோக்கமானது அனைவரும் சுத்தமான, சுகாதாரமான, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். கடைகளில் வாங்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் சமையல் பொருட்களில் காலவதியான தேதிகளை ஆராய்ந்து பொருட்களை வாங்க வேண்டும். உணவகங்ளில் பலகாரங்கள் பொட்டலம் இடும் போது செய்தித்தாள்களில் பொட்டலம் இடுவதை தவிர்த்து, வாழை இலைகள் உள்ளிட்ட சுகாதாரமான பொருட்களில் பொட்டலம் வலியுறுத்தப்படுகிறது.
நடைபயிற்சியில் ஏபிசி மகாலெட்சுமி கல்லூரி, வ.உ.சி கல்லூரி, போப் கல்லூரி, நேஷனல் பொறியியல் கல்லூரி, எஸ்.எஸ்.பி.எம், காமராஜ் கல்லூரி, குமரகுருபரர் கல்லூரி, புனித மரியன்னை கல்லூரி, அரசு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரி உட்பட 1300 மாணவ, மாணவியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இந்நடைபயணத்தில் பங்கேற்றிருப்பது மிகவும் பெருமைக்குரியது. இந்த நடைபயணம் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி 7.5.கி.மீ தூரத்தில் காமராஜ் கல்லூரி சென்று நிறைவடைந்தது.