ஷ்யாம் நியூஸ்
10.08.2022
அமைச்சர் கீதாஜீவன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி குருமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் கீதாஜீவனின் கணவர் ஜீவன், சகோதரர் ராஜா இன்று ஆஜரானார்கள். வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.