ஷ்யாம் நீயூஸ்
07.08.2022
தூத்துக்குடியில் ஒரே நாளில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உடைப்பு ஊழியர்கள் அச்சம்
இன்று ஒரே நாளில் தூத்துக்குடி நகரில் இரண்டு டாஸ்மாக் கடைகளை உடைத்து சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் இதனால் ஊழியர்கள் திக்குத் தெரியாமல் பதட்டத்தில் உள்ளனர். டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் சம்பவம் நடத்த இடத்திற்கு வராததால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாப்பிள்ளையூரனி கடை எண் 10084 ல் இன்று காலை கடை திறப்பதற்காக சென்ற கடை ஊழியர்கள் கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் மேலாளர் அலுவலகத்திறக்கு தெரிவிக்கப்பட்டும் மாலை 5 மணி வரை டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகள் வராததால் ஊழியர்கள் பதட்டத்தில் உள்ளனர் .இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சுந்தரவேல் புரம் மேற்கு பகுதி கடையம் 9969 ல் பணம் கொடுக்காமல் இரண்டு வாலிபர்கள் மது கேட்டுள்ளனர் ஊழியர்கள் மது கொடுக்காததால் கடை ஊழியர்கள் மீது கல்வெறி வீச்சு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். தகவல் அறிந்த வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இந்தக் கடை நிலவரம் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டு 5 மணி நேரத்திற்கு மேலாக மாவட்ட மேலாளர் சம்பவ இடத்திற்கு வராததால் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன் தூத்துக்குடி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முருகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்