75வது ஆண்டு சுதந்திர தின விழா. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய கொடி மற்றும் காங்கிரஸ் கொடியினை கையில் ஏந்தி பாதயாத்திரை நடைபெற்றது.
ஷ்யாம் நீயூஸ்
16.08.2022
75வது ஆண்டு சுதந்திர தின விழா. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய கொடி மற்றும் காங்கிரஸ் கொடியினை கையில் ஏந்தி பாதயாத்திரை நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி அவர்கள் அறிவித்த படி 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேசிய தோழர்கள் பாதயாத்திரை மேற்க்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில்.
75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை வகித்தார். 5க்கும் மேற்பட்ட அலங்கார வண்டியில் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளின் வரலாற்று மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நாட்டிற்காக பாடுபட்ட வரலாறு பொருத்தபட்டு வாகனங்களில் தேசபக்தி பாடல்கள் ஒளிபரப்பபட்டு 200க்கும் மேற்பட்ட தேசியத் தோழர்கள் தேசிய கொடி மற்றும் காங்கிரஸ் கொடியினை கையில் ஏந்தி, பீச் ரோட்டில் உள்ள அன்னை இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் மாநில காங்கிரஸ் துணை தலைவர் A.P.C.V சண்முகம் தொடங்கிவைத்தார். இந்த பாதயாத்திரை புறப்பட்டு புதுதெரு வழியாக மட்டக்கடை, 1ம் கேட் காந்தி சிலை, பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து பாதயாத்திரை முடிவடைந்தது