தூத்துக்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் சேமிப்பு புதிய கட்டிட பூமி பூஜை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு.
ஷ்யாம் நீயூஸ்
24.08.2022
தூத்துக்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் சேமிப்பு புதிய கட்டிட பூமி பூஜை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடி மீளவிட்டானில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நான்கு மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு களம் 3 கோடியே 90 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நல மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் மதுரை கோட்ட செயற்பொறியாளர் கே.ஆர்.முருகன், உதவி செயற்பொறியாளர் கே.மயில்வாகணன், உதவி செயற்பொறியாளர் கே.கவியரசன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முத்துலட்சுமி, தரக்கட்டுப்பாடு ஆய்வாளர் பொன்னுச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சிவில் சப்ளை தாசில்தார் ஜஸ்டிஸ், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், கவுன்சிலர் இசக்கிராஜா, வட்ட செயலாளர் பொன்பெருமாள், அவைத்தலைவர் செல்வம், வட்ட பிரதிநிதி பாஸ்கர், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி அல்பர்ட் மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.