ஷ்யாம் நியூஸ்
12.08.2022
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் கவலை அளிக்கிறது. இதனை ஒழிக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும் என அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இளைஞர்கள் சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் இருப்பது கவலை அடிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. இதனை ஒழிக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும். மத்திய அரசு கொண்டுவர உள்ள மின்சார சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவசம் மின்சாரம் ரத்து செய்யப்படாது. ஆனால் அதில் பல புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தத் திட்டத்தில் சேருவதற்காக பதிவு செய்து வருகின்றனர். மத்திய மீன்வளத் துறையின் மூலமாக தமிழகத்தில் ராமநாதபுரத்தில் பெண்களுக்காக கடப்பாசி வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு அனுப்பி உள்ளது.
அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு விரைவில் அந்தத் திட்டம் தொடங்கப்படும். காசிமேடு துறைமுகம் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மேம்படு துறைமுகம் மேம்பாட்டு திட்டம் உட்பட 20 க்கும் மேற்பட்ட திட்டங்கள் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். பேட்டியின் போது நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.