ஷ்யாம் நீயூஸ்
22.08.2022
சென்னை எத்திராஜ் கல்லூரி துவக்கவிழா கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றினார்.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான மாணவர் பேரவையின் துவக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.
பெண்கள் ஒரு இடத்திற்கு வருவது பொது இடத்தில் தங்களுக்கான இடத்தை பெறுவது ஒரு போராட்டமாக உள்ளது. நம்மை சுற்றி எது நடந்தாலும் அதில் அரசியல் உள்ளது என்றும் அரசியல் தெரிந்து கொள்ளுங்கள் அரசியல் பேசுங்கள் என்று சென்னை எத்திராஜ் கல்லூரி விழாவில் எம்பி கனிமொழி கூறியுள்ளார். அரசியலில் 50% பெண்களை கூடிய விரைவில் அடைவோம் என்றும் நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வித்தியாசம் உள்ளது. அடித்தட்டு மக்களை முன்னேற்றத் தான் நலத்திட்டங்கள் உள்ளது என்று எம்பி கனிமொழி உரையாற்றியுள்ளார்.