ஷ்யாம் நியூஸ்
12.08.2022
புதூர் அருகே வேகத்தடையில் ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், புதூர், வீரபாண்டிய கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் சந்தன மாரியப்பன் மனைவி வீரசெல்வி (43). இவர் நேற்று அப்பகுதியில் ஸ்கூட்டரில் சென்றபோது வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) அனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.