தூத்துக்குடியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், துவக்கி வைத்தனர். கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்பு
ஷ்யாம் நீயூஸ்
11.08.2022
தூத்துக்குடியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், துவக்கி வைத்தனர். கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்பு
தூத்துக்குடி தமிழக அரசு போதை பொருள் விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன். மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணவன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணப்பிராண், மாநில திமுக மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், விவசாய அணி செயலாளர் ஆஸ்கர், தொண்டரணி செயலாளர் வீரபாகு, வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ரகுராமன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ரெங்கசாமி, ஒன்றிய செயலாளர்கள் மாடசாமி, ஜெயக்கொடி, சுப்பிரமணி, அரசு வக்கீல் பூங்குமார், மாவட்ட கல்வி அலுவலர் பாலதாண்டாயுதம், மாவட்ட உணவு வழங்கல் பாதுகாப்பு நியமண அலுவலர் மாரியப்பன், சுகாதரார பணிகள் இணை இயக்குநர் பொற்செல்வன், மருத்துவ கல்லூரி இணை இயக்குநர் பொன்இசக்கி, மருத்துவ கல்லூரி பொறுப்பு டீன் ராஜேந்திரன், தாசில்தார் செல்வகுமார், கோட்டாச்சியர் சிவசுப்பிரமணியன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின், மற்றும் மணி, செந்தில்குமார், அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு முன்பாக தப்பாட்டம் கலைநிகழ்ச்சியும் சிறுவர் சிறுமிகளின் சிலம்பாட்டத்துடன் சென்ற ஊர்வலத்தில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் ஊர்வலம் நிறைவு பெற்றது. பின்னர் அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர்கள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.