ஷ்யாம் நியூஸ்
10.08.2022
கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜரானார்.
அதன்படி இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்திற்கு வந்து, முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி முன்னிலையில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் என்பவரும் நீதிபதி முன்னிலையில் ஆஜரானார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.