ஷ்யாம் நீயூஸ்
29.08.2022
தூத்துக்குடியில் பெண்கள் கபடி போட்டி கே.வி.கே.சாமி அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி முத்துநகர் மற்றும் நேசக்கரங்கள் கபடி குழுக்கள் இணைந்து நடத்தும் 4ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட பெண்கள் ஒரு நாள் கபடி போட்டி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் கே.வி.கே.சாமி அணியினருக்கு முதல் பரிசாக ரூ6000 கொல்லம்பரும்பு தங்கமாரியப்பன், சகாய மாதாபட்டிணம ஜான்சன்;, கோவில்பிள்ளைவிளை முத்துராஜ், மின்னல் ஸ்போட்ஸ் கிளப் அணியினருக்கு இரண்டாவது பரிசாக ரூ4000 பாலன் டிரேடர் பில்டிங் மெட்டிரியல் சப்லெயர். ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி அணியினருக்கு மூன்றாம் பரிசாக ரூ2500 மாதாநகர் குரு மார்பில்;ஸ் குருராஜ், ரத்னா ஸ்போட்ஸ் கிளப் அணியினருக்கு நான்காம் பரிசாக ரூ2500 காமராஜ் நகர் ஜெனிபர் மார்பில்ஸ் அற்புதராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசினை வழங்கினார்கள். பின்னர் அனைத்து அணிகளுக்கும் நேசக்கரங்கள் கபடி குழு பரிசு கோப்பையை வழங்கியது