ஷ்யாம் நியூஸ்
11.08.2022
தூத்துக்குடி பொருட்காட்சியில் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட தகராறில் 2பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 6பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் பொருட்காட்சி திடல் முன்பு நின்று கொண்டு இருந்த பொருட்காட்சி தலைவர் டென்சிங் தரப்பினருக்கும், பொருளாளர் நிர்மலா தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். அப்போது, நிர்மலாவின் மகன்கள் ராகேஷ், ஷியாந்த் ஆகிய 2 பேருக்கும் கத்திகுத்து விழுந்தது.
எதிர் தரப்பை சேர்ந்த ஆல்வின் என்பவர் காயம் அடைந்தார். இவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இருதரப்பினர் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் டென்சிங், ஹிலாரி, ஜஸ்டின், ஆல்வின், ராகேஷ், சியாந்த் ஆகியோர் மீதும் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.