ஷ்யாம் நியூஸ்
08.08.2022
ஓட்டப்பிடாரம் அருகே கோவில் திருவிழாவில் பாம்பு வித்தை காட்டிய பாம்பாட்டியை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர் கோவில் திருவிழாவில் நல்லபாம்பு மூலம் வித்தை காட்டிய நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வன அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதன்படி தூத்துக்குடி வன சரக அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் ஓட்டப்பிடாரம் வனவர் மகேஷ், வனக்காப்பாளர் பேச்சிமுத்து, வனக்காவலர் லட்சுமணன் ஆகியோர் எஸ்.குமரபுரம் கிராமத்திற்கு சென்று கோவில் கமிட்டி நிர்வாகிகளிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் பாம்பு வித்தை காட்டிய மதுரை ஆளவந்தன் பகுதி சார்ந்த சவுந்தர்ராஜன் மகன் ராஜேஷ்குமார் (46) என்ற பாம்பாட்டியை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரை பேரூரணி சிறையில் அடைத்தனர்.