நிலத்தரகர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் மாநில தலைவர் விருகை கண்ணன் கோரிக்கை
ஷ்யாம் நீயூஸ்
23.08.2022
நிலத்தரகர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் மாநில தலைவர் விருகை கண்ணன் கோரிக்கை
தூத்துக்குடி தேசிய ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத்தரகர்கள் நலச்சங்கத்தின் 15ம் ஆண்டு விழா மாநில, மாவட்ட தொகுதி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இணைந்த முப்பெரும் விழா தூத்துக்குடி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு முத்துராமன் தலைமை வகித்தார். சேகர் முன்னிலை வகித்தார். சங்கர் வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர் விருகை கண்ணன் கூறுகையில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் உள்ளது. ஆனால் நிலத்தரகர்களுக்கு எந்தவித அங்கீகாரமும் இல்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் அனைத்து தரப்பினருக்கு வீடு நிலங்கள் வாங்கி கொடுப்பது என்பது நிலத்தரகர்கள் தான். தற்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தி இருக்கிறோம் நல்ல முடிவை நிச்சயமாக அவர் தருவார். எந்தெந்த பகுதிகளில் கைடு லைன் வேல்யூ அதிகமாக உள்ளதோ அதனை குறைக்க வேண்டும். நிலத்தரகர்கள் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய முதல்வர் வழி ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர் நலத்துறையில் எங்களையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில குறைபாடுகளை தீர்த்து வைக்க உங்களோடு நான் இருப்பேன் என்று கூறினார்.
மாவட்ட புதிய தலைவராக சேகர், செயலாளராக முத்துராமன், பொருளாளராக கார்த்திகேயன், இணைச்செயலாளராக மாதவி, மாநில அமைப்பு செயலாளராக முருகன், தூத்துக்குடி தொகுதி தலைவராக சங்கர், ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
விழாவில் மாநில துணைத்தலைவர் ஐயப்பன், இணைச்செயலாளர் சுரேஷ்குமார், மற்றும் கணேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புதிய நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.