ஷ்யாம் நியூஸ்
04.08.2022
கயத்தார் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து, 85 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, செட்டிகுறிச்சி ராமதாஸ் நகர் காலனி பகுதியை சேர்ந்த சண்முகையா மகன் முருகன் (32) மற்றும் செட்டிக்குறிச்சி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் (33) ஆகிய 2 பேரும் முருகனின் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் முருகன் மற்றும் காளிராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.41,760 மதிப்புள்ள 85 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி கைது செய்யப்பட்ட எதிரிகளில் காளிராஜ் மீது ஏற்கனவே கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடதக்கது.