தூத்துக்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் மற்றும் – குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு.
ஷ்யாய் நீயூஸ்
25.08.2022
தூத்துக்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் மற்றும் – குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு.
தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று குழந்தை பாதுகாப்பு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திருப்பு முனை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் கலை அரங்கத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதில் ரூபாய் 19.20 லட்சம் மதிப்பிலான 385 மிதிவண்டிகளை மாணவிகளுக்கு வழங்கினார். பின்னர் கலை அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திருப்பு முனை விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது, அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பற்றி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுத பாணி, தூத்துக்குடி நகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மற்றும் அருன்குமார், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் சாந்தினி கௌசல் வரவேற்புரை நிகழ்த்தினார். கோவில்பட்டி கல்வி அலுவலர் சின்னராசு நன்றியுரை வழங்கினார்.