தூத்துக்குடியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ பிறந்தநாளை முன்னிட்டு முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
ஷ்யாம் நீயூஸ்
30.08.2022
தூத்துக்குடியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ பிறந்தநாளை முன்னிட்டு முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரநகரில் உள்ள நியூ பாசகரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இன்று காலை உணவை தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும் தமிழ்நாடு பனைபொருள் வாரிய உறுப்பினருமான காங்கிரஸ் எடிசன், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் முருகன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் முத்துராஜ், தனுஷ், மாநகர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் யூனியன் தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாவட்ட மீனவரணி துணைதலைவர் கென்னடி ராஜ், தெற்கு மண்டலத்தலைவர் எஸ்டி ராஜன், மற்றும் வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.