ஷ்யாம் நியூஸ்
05.08.2022
மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின்கட்டண உயர்வு, அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய கோரி மத்திய, மாநில அரசை கண்டித்து இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் கட்சியின் தென் மாநில இணை அமைப்பு செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன், தென் மண்டல மாணவரணி அமைப்பாளர் பிரவீன் ராஜன் தலைமையில் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் பேசுகையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான அரிசி, பால் போன்றவைகளின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதேபோன்று மின்கட்டண உயர்வை மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் மக்களுக்கு மின்சாரம் சீராக கிடைப்பதில்லை. அறிவிப்பு இல்லாத மின் தடை பல இடங்களில் நடைமுறையில் உள்ளது.
எனவே, மத்திய மாநில அரசு மக்களின் அத்தியாவசிய தேவையான அரிசி, பால் உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை மற்றும் மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும். இல்லையெனில் மத்திய மாநில அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற்றும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மண்டல இணை செயலாளர் கணேஷ் குமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் லித்யா பிரவீன், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் பால்துரை, மாவட்ட மாணவரணி செயலாளர் காட்வின், மாவட்ட அமைப்பார் விகேன்ஸ்வரன், மீனவரணி பெணிபிட், திலிப், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பரணிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.