ஷ்யாம் நியூஸ்
05.08.2022
தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய காங்கிரசார்கைது
அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து வருவதை கண்டித்தும் எங் இந்தியா அலுவலகத்தை அமலாக்கத்துறை சீல் வைத்ததை கண்டித்தும் ஜி எஸ் டி வரிவிதிப்பை எதிர்த்தும் இன்று அகில இந்திய அளவில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் அருகில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் துணை தலைவர் A.P.C.V சண்முகம் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M.B.சுடலையாண்டி ,காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் A.மகேந்திரன்,முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன்,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பர்னபாஸ்,பெலிக்ஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் , முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் அருள்,மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா,எஸ். பி.ராஜன், மாநகர் அமைப்பு சாரா தொழிலாற்சஙக தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர், மாவட்ட துணை தலைவர்கள் A.D. பிரபாகரன்,ஜெபராஜ்,நாராயணசாமி, மணி, கதிர்வேல்,மாவட்ட செயலாளர்கள் கோபால்,ஜெயராஜ்,சின்னகாளை, முத்துபாண்டி, குமாரமுருகேசன், சேகர்,வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,மாநில மகிளா காங்கிரஸ் துணை தலைவிS.T.C. கனியம்மாள்,INTUC மாநில செயலாளர் சுடலை,INTUC மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.ராஜ், ராஜா,மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி,ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி,மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன்,மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியன்,மகிளா காங்கிரஸ் மண்டல தலைவிகள் பீரித்தி ,சாந்தி, இந்திரா,இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் பிளஸி,முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மச்சேந்திரநாதன்,உடன்குடி நடராஜன்,வார்டு தலைவர்கள்மகாலிங்கம்,மைக்கேல்பிரபாகர்,ராஜா,சண்முகசுந்தரம்,கோபி,தாமஸ்,சிவன்யாதவ்,கந்தசாமி,முத்துராஜ்,நடேஷ்குமார்,அந்தோணிசாமி,ஜோபாய்பச்சேக்,ஜான்சன்,முனியசாமி,அம்மாகனி
தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட துணை தலைவர் சங்கர்,ஆழ்வை வட்டார தலைவர் கோதாண்டராமன்,உடன்குடி வட்டார தலைவர் துரைராஜ்ஜோசப், பாலசிங்,ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கவுன்சிலர் பாரத், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பிளஸ்வின் காளிதாஸ்,உள்பட சாலை மறியலில் ஈடுபட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்