ஷ்யாம் நியூஸ்
05.08.2022
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அஞ்சல்துறை நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் 15.08.2022 அன்று சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட Har Ghar Tiranga என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து உள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மு. பொன்னையா வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது "நமது இந்திய அரசின் ஆணைக் கேற்ப அனைத்து அஞ்சல் ஊழியர்களும் வருகின்ற 13.08.2022, 14.08.2022 மற்றும் சுதந்திர தினமான 15.08.2022 ஆகிய மூன்று தேதிகளில் தங்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார்கள். வருகின்ற 08.08.2022 அன்று தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்திலிருந்து காலை 7.00 மணி அளவில் நடைப் பயணமாக சிவந்தாகுளம் ரோட்டில் அமைதி ஊர்வலம் வர இருக்கிறார்கள்
தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் திருவைக்குண்டம் ஆகிய தலைமை அஞ்சலங்களில் Selfie Board ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் selfie எடுத்து சமூக வலைதளங்களில் upload செய்து கொள்ளலாம் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசியக் கொடியை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கொடியின் விலை ரூ. 25/- மட்டுமே. அனைத்து பொது மக்களும் தேசியக்கொடியை வாங்கிக் கொள்ளலாம். மேலும் இந்திய அஞ்சல்துறையின் இணையதளத்தில் online மூலம் order செய்தும் பெற்றுக் கொள்ளலாம்" இவ்வாறு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.