ஷ்யாம் நியூஸ்
12.08.2022
ஆழ்வார்திருநகரி அருகே நில பிரச்சனையில் சைக்கிளுக்கு காற்றடிக்க பயன்படும் இரும்பு பம்பால் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி ஆவுடையப்பன் தனது வீட்டின் முன்பு அவரது மனைவியுடன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த சங்கரநயினார் அவரிடம் தகராறு செய்து அவதூறாக பேசி அவரது மனைவியை சைக்கிளுக்கு காற்றடிக்க பயன்படுத்தப்படும் இரும்பு பம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆவுடையப்பன் நேற்று அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வன் வழக்குபதிவு செய்து சங்கர நயினாரை கைது செய்தார்.