தீப ஓளி ஏற்ற வேண்டிய மாணவிகள் தேவையில்லாத பழக்கத்தில் ஈடுபடக்கூடாது ஏபிசி மகாலெட்சுமி கல்லூரி விழாவில் கூடுதல் எஸ்.பி, கார்த்திகேயன் அறிவுரை
11.08.2022
தீப ஓளி ஏற்ற வேண்டிய மாணவிகள் தேவையில்லாத பழக்கத்தில் ஈடுபடக்கூடாது ஏபிசி மகாலெட்சுமி கல்லூரி விழாவில் கூடுதல் எஸ்.பி, கார்த்திகேயன் அறிவுரை
தூத்துக்குடி ஏபிசி மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு விழாவில் கல்லூரி முதல்வர் பால சண்முகதேவி வரவேற்புரையாற்றினார்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேசுகையில் இன்று நீங்கள் மாணவி நாளை மனைவி அடுத்து குடும்ப தலைவி என்று உங்கள் வாழ்க்கையை வளப்படுத்தி கொள்ள இருக்கிறீர்கள் சமீப காலமாக நடைபெறுகின்ற பல சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யார் என்று பார்த்தால் அதை 75 சதவீதம் பேர் பல்வேறு போதை பொருள்களை உட்கொண்டு நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் என்பதை மறந்து அறியாமையில் தவறு செய்கின்றன.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓருவார காலம் பள்ளி கல்லூரிகளி;ல் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் அந்த அறிவுரையை கூறுகிறேன். பல வெளிநாடுகளில் இது போன்ற பொருட்கள் சில தயாரிப்புகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அதை பல வழிகளில் இந்தியாவுக்குள் ஊடுருவி தமிழகத்திற்கும் வந்துள்ளது. அதை தடுப்பதும் தவிர்ப்பதும் நமது கடமை படிக்கும் காலத்தில் நாம் அனைவரும் நம்மை பெற்றெடுத்த தாய் தந்தையர் கஷ்டத்தை உணர்ந்து படிக்க வேண்டும். நீங்கள் பணம் கொடுத்து கல்வியையும் அறிவையும் பெறுகிறீர்கள் அந்த காலக்கட்டத்தில் உங்கள் என்னம் உங்கள் நலனை பாதுகாப்பதும். எதிர்கால வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்ற சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும் வாட்சப், முகநூல் போன்றவற்றில் தேவையில்லாத பதிவுகளுக்கு லைக் கொடுக்க கூடாது.
கல்லூரி படித்த பின்பு நாம் கணவரை தேடும் போது நல்ல கல்வி படித்துள்ளாரா நல்ல பணிசெய்கிறாரா அவர் வாங்கும் சம்பளம் நம் குடும்பத்தை வழிநடத்துவதற்கு போதுமானதாக இருக்குமா என்று பல்வேறு வகையில் ஆராய்ந்து திருமணம் செய்து கொள்கிறோம். இதில் எப்படி கவனம் செலுத்திகிறோமோ அதே போல் நம்ம குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி உறவினர்கள் மத்தியில் தவறான வழிக்கு செல்பவர்கள் இருந்தால் அவர்களை போதை பொருள்களினால் ஏற்படும் பாதி;ப்புகளை எடுத்துகூறி அதை உட்கொள்வதை தடுக்க வேண்டும். பல்வேறு போதை பொருள்களை உட்கொள்வதால் உடலுறுப்புகள் மூளை பாதிப்புகள் எற்பட்டு எல்லா வகையிலும் பாதிக்கப்படும் நிலைதான் வருகிறது.
சில தவறுகளையும் செய்வதற்கு வழிவகுக்கிறது. இவையனைத்தும் முழுமையாக தடுப்பதற்கு இதுபோன்ற கல்லூரி பள்ளிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம் பலர் காலையிலிருந்து இரவு வரை நன்றாக உழைத்துகொண்டு கிடைக்கின்ற ஊதியத்தில் போதையில் மயங்கி தன் குடும்பத்தை கவணிக்காமல் விட்டுவிடுவதால் பல இழப்புகளும் ஏற்படுகின்றது. இது போன்ற நிலைகள் இனி தமிழகத்தில் வரக்கூடாது. என்று முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளார். அனைவரும் இதை தடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விழாவில் மதுவிலக்கு காவல்துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு, மாணவர் பேரவை ஓருங்கிணைப்பாளர் போராசிரியர் மேரி சுபா, மாணவர் பேரவை பொறுப்பாளர் பேராசிரியர் பாலதீபஅரசி, கனிதத்துறை உதவி பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஓருங்கிணைப்பாளர் போராசிரியர் சண்முகப்பிரியா, பேராசிரியர் வசந்தசேனா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். உதவி பேராசிரியர் செல்வராணி நன்றியுரையாற்றினார்.