ஷ்யாம் நியூஸ்
04.08.2022
விளாத்திகுளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 78 பவுன் தங்க நகைகள், ரூ.3லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சில்லிரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி இவரது மனைவி ராதா (39). இவர்கள் கடந்த 19ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளனர். நேற்று ஊர் திரும்பியபோது, அவர்களது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 78 பவுன் நகைகள் மற்றும் 3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சங்கலிங்கபுரம் காவல் நிலையத்தில் ராதா புகார் அளித்துள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அனிதா மற்றும் போலீசார் சம்பவத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள், கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று ரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.