ஷ்யாம் நியூஸ்
04.08.2022
கோவில்பட்டியில் மனவளா்ச்சி குன்றியோா்களுக்கான சிறப்புப் பள்ளி, ஆரம்பகால பயிற்சி மையத்தை கோட்டாட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது பள்ளியில் பயிலும் மாணவா், மாணவிகளுக்கு மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் தலைமையாசிரியை கோரிக்கை விடுத்தாா். அதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கோட்டாட்சியா் கூறினாா். பின்னா் பள்ளியில் மாணவா், மாணவிகளுடன் கோட்டாட்சியா் சத்துணவு சாப்பிட்டாா். முன்னதாக, கடலைமிட்டாய் உற்பத்தியாளா்கள் மற்றும் தயாரிப்பாளா்கள் சங்கச் செயலா் கண்ணன் வழங்கிய கடலைமிட்டாயை பள்ளி மாணவா், மாணவிகளுக்கு கோட்டாட்சியா் வழங்கினாா்.