மாப்பிள்ளையூரணி கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.
ஷ்யாம் நீயூஸ்
04.08.2022
மாப்பிள்ளையூரணி கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆ.சண்முகபுரத்தில் உதவும் கரங்கள் அமைப்பின் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கினார்.
விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மற்றும் முருகன். கௌதம், கபடி வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.