ஷ்யாம் நியூஸ்
08.08.2022
ஏரல் அருகே கோவில் கதவை உடைத்து பித்தளை குத்துவிளக்குகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில், சின்ன நட்டாத்தி பகுதியை சேர்ந்த செந்தூர் பாண்டி மகன் முத்துவேல் (25) மற்றும் சுயம்புலிங்கம் மகன் மாரிமுத்து (25) ஆகிய இருவரும் கோவிலில் உள்ள 4 பித்தளை குத்துவிளக்குகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் இமானுவேல் ஜெயசேகர் உடனடியாக முத்துவேல் மற்றும் மாரிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.10ஆயிரம் மதிப்புடைய 4 பித்தளை குத்துவிளக்குகளை பறிமுதல் செய்தார்.