ஷ்யாம் நியூஸ்
08.08.2022
செய்துங்கநல்லூர் அருகே பனை மரங்களை வெட்டி, தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் மணி (52) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள 5 பனை மரங்களை, புளியங்குளம் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் முருகன் (55) என்பவர் வெட்டியுள்ளார். இதையறிந்த மணி அவரை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகன் மணியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மணி அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தார். கைது செய்யப்பட்ட முருகன் மீது செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.