ஷ்யாம் நியூஸ்
08.08.2022
தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் ரூ.8 லட்சம் கோதுமை திருட்டு தொடர்பாக 2பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் யோகேஷ் விஸ்வநாதன் (39). இவர் அங்குள்ள ஒரு தனியார் உணவு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது நிறுவனத்துக்கு தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் குடோனில் இருந்து 10 லோடு கோதுமை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு லாரியில் இருந்த சுமார் 32 டன் கோதுமையை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இறக்காமல் திருடி வேறு பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதன் மதிப்பு ரூ.8 லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த யோகேஷ் விஸ்வநாதன் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தனியார் குடோன் பொறுப்பாளராக பணியாற்றிய திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தை சேர்ந்த ரிச்சர்டு, செங்குறிச்சியை சேர்ந்த பாலசபரி செல்வராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.