இந்தியாவிற்கு தமிழகம் வழிகாட்டியாக திகழச் செய்தவர் கலைஞர் நலத்திட்ட உதவி வழங்கி அமைச்சர் தாமோ அன்பரசன் புகழாரம்
ஷ்யாம் நீயூஸ்
12.08.202
இந்தியாவிற்கு தமிழகம் வழிகாட்டியாக திகழச் செய்தவர் கலைஞர் நலத்திட்ட உதவி வழங்கி அமைச்சர் தாமோ அன்பரசன் புகழாரம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி கலைஞர் அரங்கில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தையல் இயந்திரம் 33, சைக்கிள் 5, கிரைண்டர் 2, இஸ்திரி பெட்டி 12, ஊனமுற்றோர் மூன்று சக்கரம் சைக்கிள் 3, போக்குவரத்து கழகத்திற்கு வெல்டிங் மிஷின் ஏர் பிரஷர் கன் ஆகியவற்றை வழங்கி
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை நகர்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தாமோ அன்பரசன், நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் மறைந்தாலும் நம் இதயமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நான்காம் ஆண்டு நினைவுநாள் விழாவை யொட்டி கழக நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் கிடைக்கின்ற மகிழ்ச்சியை விட வேறு எதுவும் இருக்க முடியாது கலைஞர் 5 முறை முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். அவர் காலத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. அண்ணா காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து கருணாநிதி தமிழகத்தில் குக்கிராமங்கள் வரை மின்சாரத்தை வழங்கி மின் மிகை மாநிலமாக மாற்றினார். ஆனால் மகாராஷ்டிராவில் தற்போது பல கிராமங்களில் மின்சாரம் இல்லாத நிலை உள்ளது அண்ணா பெரியார் ஆகியோர் நினைவுகளையும் எண்ணங்களையும் செயல்படுத்தியவர் கலைஞர் எல்லாத் துறையிலும் சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்தவர். மத்;தியில் ஆட்சி செய்யும் அரசு கவர்னர் மூலம் நம்மை அடிமை படுத்தி வருகிறது. பல மசோதாக்கள் நிறைவேற்றி கவர்னரிடம் கொடுத்ததை இன்று வரை கையெடுத்திட்டு டெல்லிக்கு அனுப்பாமல் வைத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டுமக்களுக்காக உழைக்கிறார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை பிஜேபி கட்சியினர் நிறைவேற்றவில்லை என்று கூறுகின்றனர். தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளில் கொரோனா உதவித்தொகை 4 ஆயிரம் மற்றும் அறிவிக்கப்படாத திட்டங்களை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கு இலவச பயணம் பால்விலை பெட்ரோல் விலை குறைப்பு கொரோனா காலக்கட்டத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 50ஆயிரம் உதவித்தொகை என 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெண்களுக்கான ஆயிரம் உரிமைத் தொகை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் இந்தியாவில் நம்பர் ஓன் மாநிலமாக வருவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உழைத்துக ;கொண்டிருக்கிறார். எதிர்கட்சியினர் வாட்சப்களில் நமக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை பரப்பி வருகின்றன. கடந்த காலங்களில் எம்.பி எம்.எல்.ஏ தேர்தல் வெற்றி பெற்றதை போல் வரும் 2024ல் நடைபெறவுள்ள தேர்தலுக்கும் கடுமையாக உழைக்க வேண்டும். என்று பேசினார்.
விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ. துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவிந்திரன், மாநகர துணைச்செயலாளரும் கவுன்சிலருமான கீதாமுருகேசன், கனகராஜ், பொருளாளர் அனந்தையா, அவைத்தலைவர் ஏசுதாஸ், மாவட்ட அணி செயலாளர்கள் அந்தோணி ஸ்டாலின், மரியதாஸ், கஸ்தூரிதங்கம், உமாதேவி, ஜெபசிங், மாவட்ட அணி துணைச்செயலாளர்கள் நலம் ராஜேந்திரன், அந்தோணி கண்ணன், பிரதீப், தொழிற்சங்க மண்டலத்தவைவர் முருகன், தொழிற்சங்க நிர்வாகிகள் கருப்பசாமி, சரவணப்பெருமாள், மாநகர அணி செயலாளர் அருண்குமார், துணைச்செயலாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஆர்தர் மச்சாது, அருண்சுந்தர், செல்வின், உலகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், கதிரேசன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், தெய்வேந்திரன், இசக்கிராஜா, கண்ணன், ராமர், வைதேகி, நாகேஸ்வரி, ஜெயசீலி, மரியகீதா, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், ராஜேந்திரன், விஜயகுமார், பவாணி மார்ஷல், பொன்னப்பன், ராஜதுரை, முத்துவேல், வட்டச்செயலாளர்கள் டென்சிங், சுப்பையா, கீதாசெல்வமாரியப்பன், சேகர், வக்கீல் சதீஷ்குமார், நாராயணன், முக்கையா, பாலு, வன்னியராஜ், பகுதி இளைஞர் அணி செயலாளர் ரவி, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட், பிரதிநிதி லிங்கராஜா, மற்றும் மகேஸ்வரசிங், தெற்கு மாவட்டம் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, வக்கீல் அணி துணைச்செயலாளர் ராகுராமன், மற்றும் கபடி கந்தன், வக்கீல் கிருபாகரண், உள்பட பலர் கலந்து கொண்டனர்.